சென்னையில் சொகுசுக்கப்பல் சுற்றுலா : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

M K Stalin DMK
By Irumporai Jun 04, 2022 03:32 PM GMT
Report

தமிழகத்தில் முதல்முறையாக சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு கப்பல் திட்டத்தை முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

700 அடி நீளம், 11 தளங்கள், 796 அறைகளுடன் பல்வேறு வசதிகளை கொண்ட சொகுசு கப்பல் உருவாக்கப்பட்டுளள்து. சென்னை துறைமுகத்தில் கார்டிலியா என்கிற கப்பல் நிறுவனத்துடன் இணைந்து புதிய திட்டத்தை தமிழக சுற்றுலாத்துறை செயல்படுத்துகிறது.

சென்னையில் இருந்து புதுச்சேரி, விசாகப்பட்டினத்துக்கு சொகுசு கப்பலில் மக்கள் பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.2 நாள், 3 நாள் மற்றும் 5 நாள் என்ற வகையில் சொகுசு கப்பலின் பயணத்திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் சொகுசுக்கப்பல் சுற்றுலா : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் | Cm Stalin Starts Luxury Ship Travel Chennai

கட்டணங்களை பொறுத்தவரை தனியார் நிறுவனமே நிர்ணயம் செய்யும் எனவும், ஆன்லைன் மூலம் முன்பதிவு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 அடுக்கு கொண்ட சொகுசுக் கப்பலில் 10 உணவகங்கள், பார்கள், ஸ்பா, கடைகள் உள்ளிட்டவை கப்பலில் இடம்பெற்றுள்ளன 

இந்த சொகுசு கப்பல் திட்டத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும். இதற்கான விலை தனியார் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. சுமார் 22 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை இந்த சொகுசு கப்பலில் பயண திட்டமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.