மக்களுக்காக புதிய யுக்திகள் கொண்டு வர வேண்டும் : முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

M K Stalin DMK
By Irumporai Jun 02, 2022 12:33 PM GMT
Report

தலைமை செயலகத்தில் 19 துறைகளின் செயலாலர்களுடன் 2 ஆவது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர், மக்கள் நலனுக்காக புதிய யுக்திகளை கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் சில துறைகளில் இன்னும் அரசாணைகள் வெளியிடுவதில் தாமதம் காணப்படுகிறது. அதற்கான காரணங்களை நீங்கள் இங்கே தெரிவித்திருக்கிறீர்கள். அதையும் களைந்து விரைவான, தேவையான அனைத்து ஆணைகளும் நீங்கள் வெளியிட வேண்டும்.

இதில் நீங்கள் நேரடியாக கவனத்தை செலுத்த வேண்டும். ஏற்கனவே ஆணை வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளின் மூலம் அது கடைக்கோடி மக்களுக்குப் போய் சென்றடைந்திருக்கிறதா? அவற்றிற்குச் செயலாக்க வடிவமும் தர வேண்டும்.

எனது கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்' அந்தத் திட்டத்தை விரிவுபடுத்தி, இளைஞர்களின் வேலைவாய்ப்பினை உறுதி செய்திட வேண்டும்.

புதிய தொழில்கள் தொடங்கப்படுவதை ஊக்குவிக்க வேண்டும். அதில் நடைமுறைச் சிக்கல்கள் இருந்தால், அதை நீக்குவதற்கான முயற்சியில் நீங்கள் ஈடுபட வேண்டும்.

உங்களை ஊக்குவிக்க இந்த அரசு தயாராக இருக்கிறது. ஒவ்வொரு துறைத் தலைவரும், தங்கள் அமைச்சருடன் இணைந்து, தனது துறையில் செம்மையாகச் செயல்பட்டு, வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் அனைத்தையும், குறிப்பிட்ட காலத்திற்குள், குறிப்பிட்ட நிதி ஒதுக்கீட்டிற்குள் நிறைவேற்றிட வேண்டும்  என்று குறிப்பிட்டுள்ளார்.