நீட் தேர்வை எதிர்க்கிறோம், ஆளுநருக்கு செக் வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
தமிழகத்திற்கு என தனி கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என்றும் புதிய தேசிய கல்விக்கொள்கையை எதிர்ப்பதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 21 துணைவேந்தர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் உயர்கல்வித்துறை செயல்பாடுகள், புதிய கல்விக்கொள்கை பாடத்திட்டத்ததை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது,இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் :
கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம்
கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. உலகளவில் தலைசிறந்த பல்கலைகள் தமிழகத்தில் உள்ளன. நாட்டில் தலைசிறந்த 100 கல்லூரிகளில் 32 கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன.

அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு என்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம். தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு பல்கலை, கல்லூரிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.உயர்கல்வியால் சமூகத்தில் நன்மதிப்பும் வளமான வாழ்க்கையும் உருவாக்குகிறது.
மாணவர்களுக்கு ஆயிரம்
உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை என்பது தேசிய சராசரியை விட தமிழகத்தில் அதிகமாக உள்ளதாக கூறினார், கல்வித்தரத்தை உயர்த்துவதுடன் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அரசுப்பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளதாக கூறினார்.

கல்வியில் இருந்து மாணவர்களை அந்நியப்படுத்துவதை எதிர்க்கிறோம். தமிழகத்தில் கல்வித்துறையில் நாம் மேலும் உயர்ந்து நிற்க வேண்டும்.வெறும் வேலைவாய்ப்பு தருவது மட்டும் உயர்கல்வியின் நோக்கம் அல்ல.துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நீட் தேர்வை எதிர்க்கிறோம்
ஏனெனில் அது மாநில உரிமை சார்ந்தது.நீட் தேர்வு மட்டுமின்றி, புதிய தேசிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறோம்.தமிழகத்திற்கு என தனி கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என்று கூறிய முதலமைச்சர்
துணை வேந்தரகளை மாநில அரசேநியமிக்கும் மசோதாவை சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளோம் , ஆகவே மாநில அரசின் கொள்கை முடிவுகளை பிரதிபலிக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் செய்லபட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் பரபரப்பு! அகற்றப்பட்ட புத்தர் சிலை: காலவல்துறையினரின் கன்னத்தில் அறைந்த பிக்கு IBC Tamil