டெல்லிக்கு நான் செல்வது கைகட்டி வாய் பொத்தி நிற்க அல்ல : முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

M K Stalin Thol. Thirumavalavan DMK
By Irumporai Aug 17, 2022 03:23 AM GMT
Report

பாஜகவுடன் குறைந்தபட்ச சமரசம் கூட வைத்துக்கொள்ள மாட்டேன் என்றும் நான் கலைஞரின் பிள்ளை என்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமாவளவன் 60வது பிறந்தநாள் விழா

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் 60வது பிறந்தநாள் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர்.

டெல்லிக்கு நான் செல்வது கைகட்டி வாய் பொத்தி நிற்க அல்ல : முதலமைச்சர் மு.க ஸ்டாலின் | Cm Stalin Says About Central Government

பாஜகவுடன் குறைந்தபட்ச சமரசம் செய்துகொள்ளாது என்றும் எங்களுக்குள் மத்திய, மாநில அரசு இடையிலான உறவு மட்டுமே இங்கே உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

நான் கலைஞரின் பிள்ளை

  டெல்லிக்கு நான் சொல்வது கைகட்டி வாய் பொத்தி நிற்க அல்ல என்றும் நான் கலைஞரின் பிள்ளை என்றும் அவர் தெரிவித்தார் மேலும் சனாதன வாதிகளால் அதிகப்படியான தாக்குதலை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது என்றும் சனாதன சக்திகளை தனிமைப்படுத்துவோம் என்றும் முதல்வர் சூளுரைத்தார்

இந்த நிலையில் இன்று குடியரசுத்தலைவர் முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை சந்திக்க டெல்லி சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்