திமுக ஆட்சியில் கட்டியதை திறந்து வைத்தவர் தான் ஜெயலலிதா : முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்

M K Stalin DMK
By Irumporai Jun 12, 2023 05:46 AM GMT
Report

திமுக ஆட்சியில் கட்டியதை திறந்து வைத்தவர் தான் ஜெயலலிதா என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 முதலமைச்சர் கருத்து

திமுக ஆட்சியில் கட்டப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஜெயலலிதா திறந்து வைத்தார், திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக அவர் மாற்றினார்.

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை வெளிப்படையாக எதிர்த்த ஜெயலலிதா, பின்னர் கல்வெட்டில் தனது பெயரைப் பொறித்து திறந்து வைத்தார்; இந்த வரலாறு எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வாய்ப்பு இல்லை  

திமுக ஆட்சியில் கட்டியதை திறந்து வைத்தவர் தான் ஜெயலலிதா : முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் | Cm Stalin Says About Admk And Jayalalitha

உழவர்கள் பயன்

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த அரசு வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்து உழவர் நலன் சார்ந்த திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதாக கூறிய முதலமைச்சர்.

குறிப்பாக கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்தி, அதன் மூலம் இரண்டு ஆண்டுகளில் இதுவரை 23.54 லட்சம் உழவர்கள் பயனடைந்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.