அரசியலில் புதிய எதிரி யார்? சிரித்தபடி பதில் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின்
அரசியலில் அனைவரையும் நண்பர்களாக பார்க்கிறேன், மதிக்கிறேன் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொளத்தூர் தொகுதியில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் முக ஸ்டாலின் அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான நலன் சார்ந்த திட்டங்கள் எதுவும் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.
சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு தக்க பாடத்தை புகட்டுவார்கள் என தெரிவித்தார்.
மேலும் காங்கிரஸ் உடனான கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு குறித்தான ஆலோசனை விரைவில் தொடங்கும் என தெரிவித்தார்.
அப்போது செய்தியார்கள் அரசியலில் புதிய எதிரிகள் யார் என கேள்வி எழுப்பினர், அதற்கு, யாரையும் நான் எதிரியாகப் பார்க்கவில்லை, அனைவரையும் நண்பர்களாகத் தான் பார்க்கிறேன் மதிக்கிறேன் என சிரித்தபடியே பதிலளித்து சென்றார்.
