ஆளுநர் ரவியின் பதவி காலம் நீட்டிக்கப்படுமா?- முதல்வர் கொடுத்த ரியாக்க்ஷன்!
முன்னதாக தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என். ரவியின் பதவிகாலம் ஜூலை மாதத்தோடு நிறைவடையவுள்ளது.
ஆளுநர்
சென்னை, கொளத்தூர், எவர்வின் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்,'' சாதி, மதம், பொருளாதாரம், சமுதாயச் சூழல் என்று, இது எதுவுமே ஒருவர் கல்விக்கு தடையாக இருக்கக் கூடாது.
முதல்வர்
இதுதான் என்னுடைய எண்ணம். கல்விதான் உங்களிடமிருந்து யாரும் திருட முடியாத சொத்து. இதைத்தான் நான் தொடர்ந்து மாணவர்களிடம் சொல்லிக் கொண்டு வருகிறேன் என்று தெரிவித்தார். பின்னர் விழாவை முடித்து கொண்டு புறப்படும் போது முதலமைச்சரை சந்தித்த செய்தியாளர்கள் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவி காலம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுப்பினர்.
இதற்க்கு நான் ஜனாதிபதியும் இல்ல பிரதமரும் இல்ல” என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.
முன்னதாக தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என். ரவியின் பதவிகாலம் ஜூலை மாதத்தோடு நிறைவடையவுள்ள நிலையில், புதிய ஆளுநரை நியமிப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.