தேர்ந்தெடுக்காத மக்களும் மகிழ்ச்சியடையும் வகையில் பணியாற்றுகிறோம் - முதல்வர் பெருமிதம்!!

M K Stalin Chennai
By Karthick Oct 21, 2023 04:23 AM GMT
Report

நேற்று சென்னை கொளத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.

கொளத்தூரில் முக ஸ்டாலின்

சென்னை கொளத்தூரில் 3.84 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கால்பந்து மைதானம் மற்றும் சிறுவர் பூங்கா ஆகியவற்றை திறந்து வைத்து புதிதாக 33 திட்டப் பணிகளுக்கு முதல்வர் முக ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

cm-stalin-public-meeting-in-chennai-kolathur

பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தன்னை தேர்ந்தெடுத்த கொளத்தூர் தொகுதிக்கு ஒவ்வொரு முறை வரும்போதும் புத்துணர்ச்சி பெறுவதாகவும் 10 நாட்களுக்கு ஒருமுறை கொளத்தூர் தொகுதிக்கு வருவதை வழக்கமாக கொண்டிருப்பதாகவும் கூறினார்.

மனுக்களே குறைந்துவிட்டது

தங்களை தேர்ந்தெடுத்த மக்கள் மட்டுமின்றி, தேர்ந்தெடுக்காத மக்களும் மகிழ்ச்சியடையும் வகையில் தாங்கள் பணியாற்றி வருவதாக பெருமிதம் தெரிவித்த அவர், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் இதுவரை 1896 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்றார்.


அம்மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட காரணத்தால், மனுக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது என்றும் இப்போதெல்லாம் அதிகபட்சம் 25 மனுக்கள் கிடைப்பதே பெரிதாக இருக்கிறது என பெருமிதம் தெரிவித்தார்.

திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்

தேர்தல் நேரத்தில் அறிவித்த பல திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருப்பதாக தெரிவித்து, குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது எனக் கூறினார்.

cm-stalin-public-meeting-in-chennai-kolathur

குறிப்பிட்ட ஒரு நாளுக்கு முன்பாகவே பயனாளிகள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது என்று தெரிவித்த முதல்வர் முக ஸ்டாலின், அத்திட்டத்தை செயல்படுத்த முடியுமா? என பலர் கேள்வி எழுப்பிய நிதிநிலை சரிசெய்து பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் திட்டத்தை நிறைவேற்றினோம் என கூறினார்.