எதிலும் தனிப்பாணி - அதுதான் பார்த்திபன் : இரவின் நிழல் படம் பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

Parthiban M K Stalin Iravin Nizhal
By Irumporai Aug 02, 2022 12:12 AM GMT
Report

இரவின் நிழல் படத்தை பார்த்து ரசித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் பார்த்திபனுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இரவின் நிழல்

நடிகர் இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள இரவின் நிழல் திரைப்படம் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

எதிலும் தனிப்பாணி - அதுதான் பார்த்திபன்  : இரவின் நிழல் படம் பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து | Cm Stalin Praised The Film Iravin Nizhal

இந்த நிலையில் இரவின் நிழல் படட்தை பார்த்த முதலமைச்சர்  ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில்

எதிலும் தனிப்பாணி

எதிலும் தனிப்பாணி - அதுதான் பார்த்திபன்.ஒத்த செருப்புக்குப் பிறகு ஒத்த ஷாட் படம்!இரவின் நிழல் படத்தின் தொழில்நுட்பத் திறன், தமிழ்த் திரையுலகின் தொழில்நுட்பத் திறனின் உயரம்!

நான்லீனியர் சிங்கிள் ஷாட்படத்தின் மூலம் தான் ஒரு டெக்னாலஜி சீனியர் என காட்டியுள்ள அவருக்கு வாழ்த்துகள்!’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.