சான் பிராசிஸ்கோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த செயல் -வீடியோ வைரல்! இதை கவனிச்சீங்களா..
தானியங்கி காரில் பயணித்த வீடியோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மு.க.ஸ்டாலின்
உலக நாடுகளின் முன்னணி நிறுவனங்களைச் சந்தித்து சர்வதேச அளவில் தமிழ்நாட்டிற்குத் தொழில் முதலீடுகளைக் கொண்டுவரும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு 17 நாட்கள் பயணமாகச் சென்றுள்ளார்.
தொடர்ந்து சான் பிராசிஸ்கோவில் முதலீட்டாளர் மாநாடு, ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள் நிறுவன அலுவலகங்களுக்கு விசிட், சான் பிராசிஸ்கோ தமிழர்களுடன் சந்திப்பு என பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜாகுவார் நிறுவனத்தின் ஓட்டுநர் இல்லாமல் சாலையில் தானாகவே இயங்கும் நவீன வசதி கொண்ட காரின் முன் சீட்டில் அமர்ந்து பயணித்தார்.
அசத்தல் டிவீட்
இது தொடர்பாகத் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் இன்று உலகத்தின் வேறுபல பாகங்களில் உள்ளவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல அற்புதங்களும் அப்பாகங்கள் அடைந்துள்ள முற்போக்குகளும் முதலாகியவை எல்லாம் அந்நாட்டவர்கள்,
பழையவற்றோடு திருப்தி அடைந்து அதுவே முடிவான பூரண உலகம் என்று கருதி அப்பழையவற்றையே தேடிக்கொண்டு திரியாமல், புதியவற்றில் ஆர்வங்கொண்டு, நடுநிலைமை அறிவோடு, முயற்சித்ததின் பலனாலேயே ஏற்பட்டவை!- தந்தை பெரியார் (இனி வரும் உலகம்) என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.