அம்மாவை இழந்த துயரம் யாராலும் தாங்க முடியாதது : பிரதமர் மோடிக்கு மு.க ஸ்டாலின் ஆறுதல்

M K Stalin DMK
By Irumporai Dec 30, 2022 03:54 AM GMT
Report

பிரதமர் மோடியின் தாயர் ஹீராபென் மோடி இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் அகமதாபாத்தில் உள்ள யு என் மேத்தா மருத்துவமனையில் உடனலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார்.அவளுக்கு வயது 100.

முதலமைச்சர் இரங்கல்

பிரதமரின் தாயின் மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் உலகத்தலைவர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர், அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது இரங்கல் பதிவில், தாயார் ஹீராபென்னுடன் நீங்கள் கொண்டிருந்த உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பை நாங்கள் அறிவோம். தாயாரை இழந்த துயரம் யாராலும் தாங்க முடியாதது. உங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்காக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

தாயாருடன் நீங்கள் பகிர்ந்து கொண்ட நினைவுகளில் அமைதி ஆறுதலை நீங்கள் பெறுவீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோல தமிழக முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் உள்பட பலரும் ஹீராபென் மோடி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.