தீரன் சின்னமலை போல் ஆதிக்கங்களுக்கு இடம் கொடுக்காமல் வரலாற்றை எழுதுவோம் : முதலமைச்சர் ஸ்டாலின்
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267-வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து சிலைக்கு கிழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழச்சியில் அமைச்சர்கள், சென்னை மேயர், உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் :
ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட விடுதலை வீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்தநாளில் அவரைப் போற்றி.
ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட விடுதலை வீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்தநாளில் அவரைப் போற்றி, நாட்டு மக்களின் மேல் அக்கறையும் அன்பும் கொண்ட உண்மையான நாட்டுப்பற்றுடன் எவ்வித ஆதிக்கங்களுக்கும் இடம் கொடுக்காமல் இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றை எழுதிட உறுதியேற்போம்! pic.twitter.com/p1W8FmPoNE
— M.K.Stalin (@mkstalin) April 17, 2022
நாட்டு மக்களின் மேல் அக்கறையும் அன்பும் கொண்ட உண்மையான நாட்டுப்பற்றுடன் எவ்வித ஆதிக்கங்களுக்கும் இடம் கொடுக்காமல் இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றை எழுதிட உறுதியேற்போம் என பதிவிட்டுள்ளார்