நானும் எனது மகனும் தோற்றத்தில் அண்ணன், தம்பி போல இருப்போம் : முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
சென்னையில் ஒவ்வொரு சாலையிலும் ஞாயிற்று கிழமைகளில் காலை 6 முதல் 9 மணி வரை சுமார் 800 முதல் 1000 மீட்டர் வரையிலான சாலையில் 5 வாரங்களுக்கு "ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்" நிகழ்ச்சி நடத்தபட உள்ளது.
ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்
இந்த சாலைகளில் 3 மணி நேரத்திற்கு முழுவதுமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு நடனம், பாட்டு, இசை நிகழ்ச்சிகள், இலவச சைக்கிள் பயணம், ஸ்கேட்டிங், கயிறு இழுத்தல், கைப்பந்து, பூப்பந்து போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் இந்த வாரம் அண்ணா நகரில் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. 9 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அண்ணன், தம்பி போல இருப்போம்
அப்போது அவர் பேட்மிட்டன், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி மக்களை உற்சாகப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் :
உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மக்கள் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். எனக்கு கொரோனா வந்தபோதும் பெரிதாக பாதிப்பு வராமல் போனதற்கு உடற்பயிற்சியே காரணம்.

எனக்கு 70 வயது ஆகிறது. ஆனால் நானும் எனது மகனும் தோற்றத்தில் அண்ணன், தம்பி போல இருப்போம். சாப்பிடும் முன் பசியோடு அமர வேண்டும். சாப்பிட்ட பின் பசியோடு எழுந்துகொள்ள வேண்டும்.
உடல்நலத்தை பேணிப் பாதுகாத்தால் கவலைகள், மன சங்கடங்கள் எல்லாம் நம்மைவிட்டு ஓடிவிடும் என்று கூறினார்.