நிர்மலா சீதாராமனை சந்தித்த முதலமைச்சர் : என்ன புத்தகம் பரிசு கொடுத்தார் தெரியுமா ?

nirmalasitharaman gst cmstalin
By Irumporai Apr 01, 2022 06:30 AM GMT
Report

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு நடத்தினார். பல்வேறு முக்கியமான கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் இந்த சந்திப்பில் பேசியதாக கூறப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த 3 நாள் பயணத்தில் அவர் பல்வேறு தலைவர்களை சந்திக்கிறார். நேற்று பிரதமர் மோடியை அவர் சந்தித்தார். இந்த நிலையில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமானுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு நடத்தினார்.

சுமார் 20 நிமிடங்கள் இவர்கள் ஆலோசனை நடத்தினர். தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இந்த சந்திப்பில் உடன் இருந்தார். இந்த சந்திப்பில் தமிழ்நாடு அரசு சார்பாக கோரிக்கைகள் அடங்கிய முக்கியமான அறிக்கை ஒன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அளிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உடன் இருந்தார். தமிழ்நாடு நிதி நிலை பற்றி இவர்கள் ஆலோசனை செய்தனர். அதேபோல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்தும் இவர்கள் ஆலோசனை செய்தனர்.

ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க கோரி நிர்மலா சீதாரமனிடம் முதல்வர் வலியுறுத்தினார். மத்திய அரசு 38 பிரிவுகளில் கீழ் ரூ.20,287 கோடி நிலுவை தொகையை தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டும். ஜி.எஸ்.டி நிலுவை தொகை மட்டும் ரூ.9,842.58 கோடி தர வேண்டும்.

இது குறித்த கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் வைத்தார். பொதுவாக அரசு தலைவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்கும் போது புத்தகங்கள் கொடுப்பது வழக்கம் அந்த வகையில் இன்று இந்த நிலையில் இன்று சந்திப்பின்போது பொருநை நாகரிகம் குறித்த புத்தகத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வழங்கினார் முதல்வர் .

ஸ்டாலின். தமிழர்களின் வரலாறு, நாகரீகம் பற்றிய புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது.