முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது! லாக்டவுனா?

today budget meeting cm stalin minister meeting
By Anupriyamkumaresan Aug 04, 2021 03:45 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in அரசியல்
Report

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது! லாக்டவுனா? | Cm Stalin Minister Meeting Today

பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக அமைச்சரவை கூடி விவாதிப்பது வழக்கம். தமிழகத்தில் மக்கள் நலத் திட்டங்களுக்காக துறை வாரியாக அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள், அதற்கு ஆகும் செலவுகள் போன்றவை, அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக பேசப்படும்.

இந்த நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ளார்.