சிங்கப்பூர் பயணம் : தொழில் நிறுவன அதிகாரிகளை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M K Stalin DMK
By Irumporai May 24, 2023 03:21 AM GMT
Report

இன்று காலை சிங்கப்பூர் தொழில் நிறுவன தலைமை அதிகாரிகளை சந்தித்து பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.   

முதலமைச்சர் பயணம்

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் நேற்று சிங்கப்பூர் சென்றடைந்தார்.

இன்று காலையில் இருந்தே முதலமைச்சரின் திட்டப்பணிகள் துவங்கின. முதற்கட்டமாக , சிங்கப்பூர் முன்னணி தொழில் நிறுவன அதிகாரிகளை சந்தித்து முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

சிங்கப்பூர் பயணம் : தொழில் நிறுவன அதிகாரிகளை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Cm Stalin Met With The Of Singapore

முதலீட்டாளர்கள் மாநாடு

இதனை அடுத்து , இன்று மாலை 4 மணி அளவில் 350 தொழில் நிறுவனங்களை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கேற்கும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்க உள்ளார் .   

இன்று பங்கேற்கும் முதலீட்டார்கள் மாநாட்டின் மூலம் கிடைக்கும் முதலீடுகள் ஜனவரி மாதம் தமிழகத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.