முதல்வர் ஸ்டாலின் தொழிற்துறையினர் உடன் முக்கிய ஆலோசனை
Corona
Lockdown
Stalin
By mohanelango
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வரிசையில் இன்று தொழிற்துறையினர் உடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கொரோனா முடக்கத்தால் தொழிற்துறையில் ஏற்பட்டுள்ள இழப்புகள் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் கேட்டு அறிய உள்ளார். தொழிற்துறைக்கு பல்வேறு முக்கிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.