பிரதமரை சந்திக்க டெல்லி செல்லும் முதல்வர் மு.க. ஸ்டாலின் - எப்போ தெரியுமா?
டெல்லியில் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி பிரதமர் மோடியைச் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மு.க.ஸ்டாலின்
பிரதமர் மோடி 3 நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பிலடெல்ஃபியாவுக்கு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின் போது அமெரிக்காவில் உள்ள 297 விலை மதிப்பற்ற பழைய கால சிலைகளை இந்தியாவிற்குத் திருப்பி தர வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
இதனையடுத்து நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறும் உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்கவுள்ளார். 23-ந்தேதி தேதி எதிர்காலத்திற்கான மாநாடு என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் சபையில் நடக்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார்.இந்த பயணத்தின்போது பல்வேறு நாட்டுத் தலைவர்களைச் சந்தித்துப் பேச உள்ளார்.
பிரதமர் மோடி
இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து பிரதமர் மோடி நாடு திருப்பியவுடன் அவரைச் சந்திப்பதற்காகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 26ஆம் தேதி இரவு சென்னையிலிருந்து விமானம் டெல்லி செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி செப்டமர் 27ஆம் தேதி பிரதமர் மோடியை முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பில் சென்னை மெட்ரோ ரயிலின் 2ஆம் கட்ட திட்டப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தியும்,
புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் வழங்க வேண்டிய நிதியையும் மத்திய விடுவிக்கக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பிரதமரைச் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.