கொரோனா பெருந்தொற்றுக்கு விரைவாக முற்றுப்புள்ளி வைத்திடுவோம் - முதல்வர் ஸ்டாலின்

Corona Lockdown Stalin Collectors
By mohanelango May 23, 2021 01:19 PM GMT
Report

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர நாளை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று மாவட்ட ஆட்சியர்களோடு ஆலோசனை நடத்தினார். இதில் கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இது பற்றி ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பதிவில், “மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்களது அனுபவம் - சக்தி - அறிவு - திறமை அனைத்தையும் பயன்படுத்தி #COVID19 தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்;

பெருந்தொற்றிலிருந்து நாம் மீள்வதற்கான ஒளியாக அவர்கள் விளங்கிட வேண்டும். விரைவாக பெருந்தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுவோம்!” என்றுள்ளார்.