பல்லாக்கு தூக்கி ஆட்சியை காப்பாற்றி கொண்டவர் இபிஎஸ் : முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்

M K Stalin DMK
By Irumporai Jun 11, 2023 04:29 AM GMT
Report

சேலத்தில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிமுக பற்றியும், பாஜக பற்றியும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.

திமுக செயற்குழு கூட்டம்

நேற்று சேலத்தில் திமுக செயற்குழு கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அதிமுக குறித்தும், அதிமுக பாஜக கூட்டணி குறித்தும், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் சென்னை வருகை குறித்தும் பேசினார்.

  பல்லாக்கு தூக்கிய அதிமுக

அவர் பேசுகையில், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தோல்வியை மட்டுமே அதிமுக கட்சி சந்தித்து வருகிறது.உள்ளாட்சி தேர்தல், சட்டப்பேரவை தேர்தல் என தோல்வி அடைந்து வந்த அதிமுக, பாஜகவுக்கு பல்லாக்கு தூக்கி கடந்த கால ஆட்சியை காப்பாற்றி கொண்டது.

பல்லாக்கு தூக்கி ஆட்சியை காப்பாற்றி கொண்டவர் இபிஎஸ் : முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் | Cm Stalin Made Various Aiadmk And The Bjp

அந்த கொத்தடிமை கூட்டமான அதிமுகவை நம்பி தற்போது பாஜக தமிழகம் வந்துள்ளது என விமர்சனம் செய்தார். மேலும், வரும் தேர்தலில் மக்கள் வெள்ளத்தில் அதிமுக , பாஜக என இரு கட்சிகளும் அடித்து செல்லப்படுவது உறுதி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.