ஆறு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் : மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

M K Stalin DMK
By Irumporai Feb 11, 2023 12:57 PM GMT
Report

மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான ஆறு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். 

ஒப்பந்ததாரர்கள் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும் இடையே நிலவும் பிரச்சினையால், பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஆறு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் : மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் | Cm Stalin Letter Central Minister Nitin Gadkari

தற்போது சாலையின் நிலை மிகவும் மோசமாக உள்ளதால், உடனடியாக ஆறுவழிச்சாலை பணிகளை விரைவுப்படுத்த உத்தரவிட வேண்டும். 

சாலையை நல்ல நிலையில் பராமரிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும். 

தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.