இலவச HBV தடுப்பூசி திட்டம்.., முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
இந்தியாவிலேயே முதல் முறையாக, இளம் பெண்களை கருப்பை வாய்ப் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் HPV தடுப்பூசி திட்டம் சென்னையில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கருப்பை வாய்ப் புற்றுநோய் இந்திய பெண்களிடம் அதிகம் காணப்படும் புற்றுநோய்களில் ஒன்று. இதற்கு முக்கிய காரணம் HPV வைரஸ் தொற்று ஆகும்.
இதனைத் தடுக்கும் வகையில், 14 வயதுக்குட்பட்ட 3,38,649 சிறுமிகளுக்கு அரசு சார்பில் HPV தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது.

இந்த தடுப்பூசி 2 தவணைகளாக போடப்படுகிறது. இரண்டையும் எடுத்தால் முழுமையான பாதுகாப்பு கிடைக்கும்.
இந்த தடுப்பூசி செலுத்திய பின் லேசான காய்ச்சல் அல்லது ஊசி போட்ட இடத்தில் வலி போன்ற சிறிய பக்கவிளைவுகள் மட்டுமே ஏற்படும்.
தனியார் மருத்துவமனைகளில் ரூ.28,000 வரை இருக்கும் இந்த தடுப்பூசியை அரசு இலவசமாக வழங்குவதால் அனைவருக்கும் சுகாதார பாதுகாப்பு கிடைக்கிறது.
இந்த திட்டம் பெண்களின் எதிர்கால ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஒரு முக்கிய முயற்சி ஆகும்.
மேலும், இத்திட்டம் குறித்து பள்ளி மாணவிகளுக்கும் பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளும் நடைபெறுகின்றன.