கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கு வருகை தரும் : ஜனாதிபதி திரெளபதி முர்மு

Draupadi Murmu
By Irumporai Apr 28, 2023 09:48 AM GMT
Report

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பை ஏற்று ஜூன் 5 ஆம் தேதி சென்னைக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு வருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை வரும் குடியரசுத் தலைவர்

சென்னை கிண்டியில் ரூபாய் 230 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரும் ஜூன் 5ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார்.

கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கு வருகை தரும் : ஜனாதிபதி திரெளபதி முர்மு | Cm Stalin Invite President Draupathi Murmu

  கலைஞரின் நூற்றாண்டு விழா

மேலும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் கலைஞரின் நூற்றாண்டு விழா தொடக்க விழாவிலும் அவர் பங்கேற்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த நிலையில் அந்த அழைப்பை ஏற்ற ஜனாதிபதி திரௌபதி முர்மு ஜூன் 5ஆம் தேதி சென்னை வருவதற்கு ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.