முழு ஊரடங்கை விடுமுறைகாலம் என்று பொதுமக்கள் நினைக்கின்றனர்: முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு வருகிற மே 24-ம் தேதி உடன் முடிவுக்கு வருகிறது.
இந்த நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகள் மற்றும் வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் ஊரடங்கை இரண்டு வாரத்திற்கு நீட்டிக்க மருத்துவர் குழு பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு முதல்வர் ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு உடன் ஆலோசிக்க உள்ளார்.
முழு ஊரடங்கை விடுமுறைகாலம் என்று பொதுமக்கள் நினைக்கின்றனர்; இது கொரோனா காலம் என்பதை மக்கள் இன்னும் முழுமையாக உணரவில்லை. தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு விதிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என ஆலோசனை கூட்டத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.