ஆனா ஆவன்னா வாத்தி ரைடுனா.. அரசு பேருந்தில் ஏறி திடீரென ஆய்வு மேற்கொண்ட முதல்வர் !
கண்ணகி நகரில் அரசு பேருந்தில் ஏறிய முதல்வர் மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர், இந்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை குறைக்கும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவீரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் இன்று 6-ம் கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னையில் 1200-க்கும் மேற்பட்ட மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால், சென்னை துரைப்பாக்கம் கண்ணகிநகரில் உள்ள தடுப்பூசி முகாமிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து, சென்னை மாநகரஅரசு பேருந்தில் திடீரென ஏறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

கண்ணகி நகரில் அரசு பேருந்தில் ஏறிய முதல்வர் மக்களின் குறைகளை கேட்டறிந்தார். மகளிருக்கான இலவச பேருந்து சேவை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை பற்றி பெண்களிடம் கேட்டறிந்தார்.