களத்தில் இறங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் : பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு..!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடும் விமர்சனங்களை முன்வைத்த அண்ணாமலை
கடந்த சில மாதங்களாகவே பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசின் மீதும் முதலமைச்சர் மீதும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி செய்தியாளர்களை கூட்டி திமுக அரசின் ஊழல் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதற்கு திமுக கட்சி தலைவர்களும் அமைச்சர்களும் கடும் எதிர்ப்பினை பதிவு செய்து வந்தனர். தற்போது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
முதலமைச்சர் வழக்கு
அதில் திமுக சொத்து பட்டியல் என்ற பெயரில் அவதூறு கருத்தினை அண்ணாமலை வெளியிட்டுள்ளதாக முதலமைச்சர்ஸ்டாலின் சார்பாக சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையினை 8 வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளது முதன்மை உயர் நீதிமன்றம் , இந்த விவகாரம் திமுக மற்றும் பாஜக இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.