திருச்சியில் நடந்து சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழக சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பரப்புரை பிரச்சாரங்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், இன்று திருச்சியில் முதல்வர் மு க ஸ்டாலின் திமுக கட்சியின் சார்பாக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூரில் முதல்வர் ஸ்டாலின் நேற்று தனது தேர்தல் பிரச்சார பயணத்தை ஆரம்பித்தார்.
அதனை தொடர்ந்து, நேற்று இரவு திருச்சி வந்தடைந்த முதல்வர் ஸ்டாலின், இன்று புதன்கிழமை (1.4.2026) காலை திருச்சி கிழக்கு வேட்பாளர் இனிகோ இதயராஜாவுக்கு ஆதரவாக சாலையில், நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.
அதனை தொடர்ந்து அங்குள்ள ஒரு தேனீர் கடைக்கு சென்று அமர்ந்த ஸ்டாலின் மேற்கு தொகுதியில் அமைச்சர் கே.என். நேருவை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்கினார்.
அங்குள்ள தேநீர் கடைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள் கேஎன் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருடன் தேநீர் அருந்தினார்.

அமைச்சர் கேஎன் நேருவை ஆதரித்து நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளிலும் போட்டியிருகி்ன்றார். தேர்தல் பிரச்சார பணிகள் தீவிரமடையும் நிலையில், விஜயின் தொகுதியில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றமையால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.