முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் முக்கிய ஆலோசனை
தமிழகத்தில் கடந்த மே 10-ம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஆனாலும் கொரோனா பாதிப்புகள் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி தமிழகத்தில் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு நாளை முதல் ஒரு வாரத்துக்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதில் காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் நாளை முதல் ஒரு வாரத்துக்கு இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தோட்டக்கலைத்துறை மூலமாக காய்கறிகள், மளிகை பொருள்கள் நடமாடும் வாகனங்கள் மூலமாக மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முழு ஊரடங்கு நாளை அமல்படுத்துவதையடுத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இந்த ஊரடங்கு ஒரு வாரத்திற்கு அமலில் இருக்கும் என்றும் அதற்கு பின்பு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.