Saturday, Mar 8, 2025

நேற்று பிறந்த நாள் , இன்று உயிருடன் இல்லை : சோகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்

M K Stalin DMK
By Irumporai 2 years ago
Report

புகைப்பட செய்தியாளர் ஸ்டாலின் ஜேக்கப் மரணத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜேக்கப் மரணம்

புகைப்பட செய்தியாளர் ஸ்டாலின் ஜேக்கப் என்பவர் நேற்று செங்கல்பட்டு , மறைமலை நகர் அருகே தனது நண்பருடன் பைக்கில் வந்து கொண்டிருக்கையில், கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயமுற்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.

நேற்று பிறந்த நாள் , இன்று உயிருடன் இல்லை : சோகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் | Cm Stalin Condolences Death Of Photographer

ஆனால், சிகிச்சை பலனின்றி ஸ்டாலின் ஜேக்கப் மற்றும் அவரது நண்பர் உயிரிழந்துவிட்டனர். ஸ்டாலின் ஜேக்கப் உயிரிழப்புக்கு பலரும் தங்கள் இரங்கலை இணையத்திலும் நேரிலும் செலுத்தி வருகின்றனர். அவருக்கு மார்ச் 2ஆம் தேதி (நேற்று முன்தினம்) தான் பிறந்தநாள் என்பது சோகமான செய்தி.

முதலமைச்சர் இரங்கல்

ஸ்டாலின் ஜேக்கப் மறைவு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கழகத்தின் துடிப்பான செயல்வீரர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது என குறிப்பிட்டார்.

மேலும் , அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உடன்பிறப்புகளுக்கு தனது ஆறுதல், ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்து கொள்வதாக பதிவிட்டுள்ளார்.