தமிழகத்தில் நீட்டிக்கப்படுகிறதா முழு ஊரடங்கு? முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு மே 24-ம் தேதி வரை அமலில் உள்ளது. ஆனாலும் பாதிப்புகள் மற்றும் மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இதனால் ஊரடங்கை மேலும் நீடித்து புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதன் பின்னர் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு உடன் ஆலோசனை நடத்தி புதிய கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு நீடிப்பது பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
இந்நிலையில் மே மாதத்தின் இறுதி அல்லது ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் தான் தமிழகத்தில் கொரோனா உச்சத்தை தொடும் என வல்லுநர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.