‘திமுக வரவில்லையென்றால் டீ செலவு மிச்சம்...’ - அண்ணாமலை டுவிட்
தமிழ் புத்தாண்டையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து அளிக்க உள்ளார். இந்த தேநீர் விருந்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொள்ள உள்ளனர். அதேபோல் ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக கட்சிகளும், மார்க்சிஸ்ட் கட்சிகள் உள்பட சில கட்சிகள் புறக்கணித்துள்ளன.
நீட் விலக்கு மசோதாவை, அரசியல் அமைப்பின் படி ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்தபடி செயல்படவில்லை என்று குற்றம் சாட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளனர்.
தேநீர் விருந்து புறக்கணிப்பு குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், ஆளுநரின் தேநீர் விருந்துக்கு திமுக வரவில்லையென்றால் டீ செலவு மிச்சம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், திமுக வரவில்லையென்றால் டீ செலவு மிச்சம். மக்கள் வரிப்பணம் சேமிக்கப்படும். இதே ஆளுநர் திமுக அரசு கொடுத்த உரையை சட்டமன்றத்தில் அப்படியே படித்தது மாண்பு கருதித்தான். அப்போது மாண்பு இருந்தது. இப்போது இல்லையா?’ என்று பதிவிட்டுள்ளார்.