தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் பிறந்தநாள்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் நடிகரான கேப்டன் விஜயகாந்தின் 71வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இவரின் பிறந்தநாள் ஆண்டு தோறும் வறுமை ஒழிப்பு தினமாக அக்கட்சியால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுவதுடன், தொண்டர்களுக்கு இனிப்புகளும் வழங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கட்சி தொண்டர்களையும், நிர்வாகிகளையும் இன்று தேமுதிக தலைமை கழகத்தில் நேரில் சந்திக்கிறார் விஜயகாந்த்.
மு.க.ஸ்டாலின்
வாழ்த்து இந்நிலையில் விஜயகாந்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியீட்டுக்குள்ள ட்விட்டர் பதிவில் 'தே.மு.தி.க நிறுவனத் தலைவரும், எனது தோழருமான திரு. விஜயகாந்த் அவர்களுக்கு உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள். முழு உடல்நலத்துடன் புத்துணர்ச்சியையும் பெற்றுப் பல்லாண்டு நீங்கள் மகிழ்ச்சியோடும் நிறைவோடும் வாழ விழைகிறேன்.
தே.மு.தி.க நிறுவனத் தலைவரும், எனது தோழருமான திரு. @iVijayakant அவர்களுக்கு உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
— M.K.Stalin (@mkstalin) August 25, 2023
முழு உடல்நலத்துடன் புத்துணர்ச்சியையும் பெற்றுப் பல்லாண்டு நீங்கள் மகிழ்ச்சியோடும் நிறைவோடும் வாழ விழைகிறேன்.