கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே : கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

Kamal Haasan M K Stalin
By Irumporai Nov 07, 2022 05:07 AM GMT
Report

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று 68-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்துள்ளார். இவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர், அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில்.

கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே : கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து | Cm Stalin Birthday Wishes To Actor Kamal Haasan

தீராக் கலைத்தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்புத்தோழர் கமல்ஹாசன் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்.

கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம்,என்று தனது ட்விட்டர் பதிவில் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.