அது பாஜகவின் சவப்பெட்டியில் அறையப்படும் கடைசி ஆணி - முதலமைச்சர் காட்டம்!
பாஜகவை சாடி முதலமைச்சர் பகிர்ந்த ட்வீட் வைரலாகி வருகிறது.
பாஜக நடவடிக்கை
பாஜக அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து கோயம்புத்தூரில் திமுக சார்பில் கூட்டணிக் கட்சிகளோடு இணைந்த கண்டனக் கூட்டம் நடைபெற்றது. அதில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போன்ற பலர் கலந்துக்கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், அரசியல் நோக்கங்களுக்காக விசாரணை அமைப்புகளை அப்பட்டமாகத் தவறாகப் பயன்படுத்தும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி!
கண்டனம்
இன்று கோயம்புத்தூரில் நாம் வெளிப்படுத்திய ஒற்றுமையும் உறுதிப்பாடும் எங்கும் பரவி, பொய்க் கதைகளால் பா.ஜ.க. உருவாக்கி வைத்திருக்கும் தோற்கடிக்க முடியாத பிம்பத்தின் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்யும். வரும் பொதுத்தேர்தலில் தோல்வி உறுதியாகிவிட்டதை பா.ஜ.க. உணர்ந்துவிட்டது.
I thank all the leaders of our Secular Progressive Alliance for having registered their protest against the Union BJP Government's blatant misuse of investigating agencies for political ends.
— M.K.Stalin (@mkstalin) June 16, 2023
The unity and solidarity shown in Coimbatore today will spread everywhere and shake the… pic.twitter.com/ld8WkBv9yw
எதிர்க்கட்சியினரை அரசியல்ரீதியாக எதிர்ப்பதற்குப் பதிலாக, தங்களுடைய தோல்விகளை மறைக்கக் கோழைத்தனமான, திமிர்த்தனமான நடவடிக்கைகளில் பா.ஜ.க. இறங்கியுள்ளது.
இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது பா.ஜ.க.வின் சவப்பெட்டியில் அறையப்படும் கடைசி ஆணியாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.