சென்னை மழை பாதிப்பு குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் பேட்டி

M K Stalin Michaung Cyclone
By Fathima Dec 05, 2023 07:07 AM GMT
Report

தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சென்னையில் மழையின் பாதிப்பு குறைவு என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் முக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மீட்புப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

வெகு விரைவாகவே இயல்பு நிலைக்கு திரும்பும், 2015ம் ஆண்டில் ஏற்பட்டது செயற்கை வெள்ளம், ஆனால் இது இயற்கை வெள்ளம்.

மழை நிற்பதற்கு முன்பாகவே வெளி மாவட்ட பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு மீட்புப்பணிகள் தொடங்கியுள்ளன.

சென்னை மழை பாதிப்பு குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் பேட்டி | Cm Stalin About Chennai Cyclone News Updates

9 மாவட்டங்களில் 61 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கு தேவையான உணவு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு பெய்த மழையில் 119 பேர் உயிரிழந்த நிலையில், இம்முறை 7 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய அரசிடம் 5 ஆயிரம் கோடி நிவாரண உதவி கேட்கப்படும் என்றும், கடந்த  காலங்களுடன் ஒப்பிடுகையில் சென்னையில் பாதிப்பு குறைவு எனவும் தெரிவித்துள்ளார்.

மிக முக்கியமாக 4 ஆயிரம் கோடிக்கு சென்னையில் மேற்கொள்ளப்பட்ட பணிகளால் தான் மழை பாதிப்பு குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.