முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கம் - தமிழக அரசு அசத்தல்
முதல்வரின் முகவரி என்னும் பெயரில் புதிய துறை உருவாக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதலமைச்சரின் குறைதீர்ப்பு துறைகளை ஒருங்கிணைத்து முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் முதல்வர் உதவி மையம் குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு முதல்வரின் முகவரி என்ற பெயரில் புதிய துறை உருவாகியுள்ளது.
முதல்வரின் முகவரி துறையின் சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர் தனிப்பிரிவில் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் உள்ள சிறப்பு அலுவலர் மற்றும் தனிப்பிரிவின் கீழ் தற்போது உள்ள பல்வேறு அலுவலகப் பிரிவு அலுவலர்கள் ,முதல்வரின் முகவரி துறையின் கீழ் செயல்படும்.
ஒரு பொது குறை தீர்வு மேற்பார்வை அலுவலர் பதவி மட்டும் ,மேம்படுத்தப்பட்டு ஊரக வளர்ச்சித் துறையின் கூடுதல் இயக்குனர் நிலையில், ஓர் அலுவலர் நியமிக்கப்படுவ. ர் அவருடைய நிலைக்கு ஏற்ப அனைத்து சலுகைகள் வழங்கப்படும். ஆறு பொதுக் குறைதீர்வு மேற்பார்வை அலுவலர் பணியிடங்களுக்கு தேவைப்படும் ஊதியம் ,அகவிலைப்படி ,வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி, இதர படிகள் அனைத்தும் நடைமுறையிலுள்ள ஆணைக்கிணங்க வழங்கப்படும் .
செலவு பொது துறை வாயிலாக சம்பந்தப்பட்ட கணக்கு தலைப்பு மூலம் மேற்கொள்ளப்படும். தலைமைச் செயலகத்தில் முதல்வரின் முகவரி துறைக்கு தேவைப்படும் அனைத்து உதவிகள் வழங்கும் ஒருங்கிணைப்பு துறையாக பொது துறை செயல்படும் . பொது குறைதீர்ப்பு மேற்பார்வை அலுவலர்களுக்கு தேவைப்படும் ,அனைத்து கட்டமைப்பு வசதிகள், தளவாடங்கள் மற்றும் பிற வசதிகள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை யால் தொடர்ந்து வழங்கப்படும்.
தகவல் அழைப்பு மையம், 1100 என்ற தொலைபேசி எண் மனுக்கள் தொடர்பாக விசாரிப்பதற்காகவும் , தகவல்கள் பெறுவதற்காகவும் , மனுக்களை பதிவு செய்வதற்காகவும் மற்றும் இதர பணிகளுக்காகவும், இனி முதல்வரின் முகவரி துறையின் கீழ் இயங்கும். இந்த இணையத்தளம் தொடர்பாக அன்றாட செயல்பாடுகள் குறித்து முதல்வரின் முகவரி துறையின் சிறப்பு அலுவலர் பொதுத்துறை செயலாளர் உடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.