முதலமைச்சர் பதவியில் இருந்து ஸ்டாலின் விலக வேண்டும் : அண்ணாமலையின் அடுத்த டார்கெட்
ஆளுநர் ஆர். என் ரவிக்கு பாதுகாப்பு வழங்க முடியாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள புஷ்கர விழாவில் பங்கேற்க மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொன்மைவாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானம் ஞானரத யாத்திரையை தொடங்கி வைக்க ஆதீன மடத்துக்கு ஆளுநர் ஆர். என் ரவி இன்று சென்றார். இந்த விழாவிற்கு ஆளுநர் ரவியை அழைக்கக்கூடாது என்று விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சியினர் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர்.
அப்போது ஆளுநர் வாகனம் மீது கருப்பு கொடி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், மயிலாடுதுறையில் ஆளுநர் ஆர்.என்.ரவி வாகனம் சென்ற போது அவரது வாகனம் மீது திமுக மற்றும் கூட்டணிக் கட்சி தொண்டர்கள் கல்லை எரிந்து, கருப்புக் கொடியை வீசியிருக்கிறார்கள். தமிழக முதல்வரால் ஆளுநருக்கு கூட பாதுகாப்பு வழங்க முடியவில்லை.
எனவே முதல்வர் பதவி விலக வேண்டும் இல்லையென்றால் ஆளுநரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் ஆளுநரை அவமதித்த விவகாரத்தில் மாநில முதலமைச்சர் கண்ணை கட்டிக் கொண்டு இருக்கிறார் என்றும், இதுபற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கடிதம் எழுதவுள்ளதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார். s