இஸ்லாமியர்களை நோக்கி சுடும் முதலமைச்சர்! பாஜக வெளியிட்ட வீடியோவால் சர்ச்சை
அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, இஸ்லாமியரை நோக்கி சுடுவது போன்ற வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வருகிற ஏப்ரல் மாதத்தில் அஸ்ஸாமில் தேர்தல் நடைபெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆளும் கட்சியான பாஜக ஆட்சி தக்கவைத்துக்கொள்ள போராடும்.
இந்நிலையில் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, இஸ்லாமியர் ஒருவரை குறிவைத்து துப்பாக்கியால் சுடுவது போன்று சித்தரிக்கப்பட்ட வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
A video posted on the official Assam BJP X handle on Saturday shows Assam Chief Minister Himanta Biswa Sarma symbolically shooting at Muslims at point-blank range, with captions such as “point blank shoot,” thereby intensifying the hate campaign against Bengali-origin Muslims… pic.twitter.com/24bGb1i8lN
— Dr Syed Naseer Hussain, M P (@NasirHussainINC) February 8, 2026
குறித்த வீடியோ அஸ்ஸாம் மாநில பாஜக பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது, காங்கிரஸ் எம்பிக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வீடியோவுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கவே, குறித்த வீடியோவை நீக்கியுள்ளனர்.
ஏற்கனவே இஸ்லாமியர்களுக்கு எதிராக முதலமைச்சர் கூறிய கருத்துகள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
An official BJP handle posted a video showing the targeted, ‘point-blank’ murder of minorities. This is nothing but a call to genocide - a dream this fascist regime has harboured since decades.
— K C Venugopal (@kcvenugopalmp) February 8, 2026
This is not an innocuous video to be ignored as troll content. It is poison spread… pic.twitter.com/8mHxo4UjZV