10 ஆண்டுகளாக யாரும் செய்யாததை செய்த மு.க.ஸ்டாலின் - குவியும் பாராட்டு

dmk pmk mkstalin tnassembly2021 gkmani
By Petchi Avudaiappan Aug 31, 2021 11:21 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

 தமிழக சட்டசபையில் 10 ஆண்டுக்குப்பின் கேள்வி நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்களை கடந்துள்ள நிலையில் பல்வேறு விஷயங்களில் எதிர்கட்சிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களின் பாராட்டையும் பெற்றுள்ளனர்.

திமுகவினரால் அம்மா உணவகம் தாக்கப்பட்ட போது அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்தது, அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் விலையில்லா புத்தக பையில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது புகைப்படங்களை நீக்க வேண்டாம் என்ற அறிவிப்பு, முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையனின் பாராட்டு என ஸ்டாலினின் செயலும் நடவடிக்கையும் பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அந்த வகையில் நேற்று சட்டசபை கூட்டத்தொடரின் போது பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி கேள்வி நேரத்தின்போது எழுப்பிய கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் நேரடியாக பதில் அளித்தார்.

இது கடந்த 10 ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கேட்கும் கேள்விக்கு முதல்வர் பதில் அளித்திருப்பது இதுவே முதல்முறையாகும். இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பலரும் இணையத்தில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.