பாஜகவை பகச்சிகிட்டா - செந்தில் பாலாஜி நிலைமை தானா..? - முதல்வர் அதிரடி பதில்..!
மத்திய பாஜக அரசை பகைத்து கொண்டால் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட நிலை தான் ஏற்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் பேட்டி
புதுவை அரசின் 2024-ஆம் ஆண்டிற்கான வருட காலண்டரை அம்மாநில சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியோடு கழித்துசெல்ல பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம் என குறிப்பிட்டார்.
கொரோனா பரவல் குறித்து தீவிரமாக கவனித்து வருவதக்கவும், மத்திய அரசிடம் இருந்து கட்டுப்பாடுகள் குறித்து அறிவுறுத்தல்கள் இல்லை என்று தெளிவுபடுத்திய முதல்வர் ரங்கசாமி, தேவை ஏற்படுத்தும் போது மத்திய அரசிடம் செல்வோம் என்றும் கூறினார்.
செந்தில் பாலாஜி நிலை
பாஜகவிலிருந்து வெளியே வந்தால் தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஏற்பட்ட நிலைமை தான் ஏற்படும் என அம்மாநில எம்பி வைத்திலிங்கம் கூறியதற்கு பதிலளித்த முதல்வர் ரங்கசாமி, எந்த நிலைமையிலும் அது தங்களுக்கு ஏற்படாது என்று உறுதிபட தெரிவித்து அந்நிலை எப்போதும் இல்லை என்று கூறி, நிர்வாகத்தில் வேகமாக செயல்பட வேண்டும் என்பதே எங்கள் எண்ணம் எனக்குறிப்பிட்டார்.
மேலும், மாநில அந்தஸ்தை பெற வேண்டும் என்பதே எங்கள் எண்ணம் என்று தெளிவுபடுத்திய ரங்கசாமி, அதையே தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக குறிப்பிட்டு, மாநில அந்தஸ்தை பெற ஒவ்வொறு முறையும் மத்திய அரசை வலியுறுத்தி வருவதாக கூறினார்.