தாயின் அருகில் புல்லாங்குழல் வாசித்த முன்னாள் முதலமைச்சர்! மருத்துவமனையில் நெகிழ்ச்சி
இந்தியாவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன் தாயின் அருகில் முன்னாள் மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா புல்லாங்குழல் வாசித்த வீடியோ காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக வை சேர்ந்த அர்ஜுன் முண்டா ஜார்க்கண்டின் முன்னாள் முதலமைச்சர் ஆவார்.
அவரது தாயார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தனது தாயை சந்தோஷப்படுத்தவும், அவருக்கு தைரியம் அளிக்கவும் அர்ஜுன் முண்டா புல்லாங்குழல் வாசித்துள்ளார், இதனால் அவரது தாய் புன்னகைத்துள்ளார்.
இதனை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ள அர்ஜுன் முண்டா, என் வாழ்வின் விலைமதிப்பற்ற வரம் அம்மா, அன்பு தான் என் மிகப்பெரிய பலம், அவரது ஆசிர்வாதங்கள் என் ஆதரவு என பதிவிட்டுள்ளார்.
Arjun Munda playing the flute for his ailing mother is pure sanskar. In a time when politics is noise, this is the real India — respect, care, and roots. Jai Maa. 🙏 #ArjunMunda #Jharkhand https://t.co/cgy8bzPmxl
— Himanshu Jain (@HemanNamo) November 1, 2026