குற்றவாளிகள் யாரும் தப்ப கூடாது - ஜெம் வீரமணி வழக்கில் முதல்வர் விஜய் உத்தரவு
cm vijay order no culprits to escape in gem veeramani case: ஜெம் வீரமணியின் துஸ்பிரயோக வழக்கில் தொடர்புடைய யாரும் தப்பக்கூடாது என முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
ஜெம் வீரமணி வழக்கு
சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்யும் ஆதாரங்கள் அடங்கிய பென்டிரைவ் உடன் அளித்த புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவின் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது.

அந்த வீடியோவில், வயதான நபர் ஒருவர் 13 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்யும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த வீடியோவில் இருப்பது பிரபல கிரானைட் தொழில் அதிபரும், ஜெம் குழுமத்தின் தலைவருமான 84 வயதான வீரமணி என்பது தெரியவந்தது.
அறக்கட்டளை, ஆசிரமங்கள் தொடங்கி ஏழை மாணவிகளுக்கு படிக்க நிதி உதவி அளித்து அதன் மூலம் சிறுமிகளை துஸ்பிரயோகத்திற்கு பயன்படுத்தியுள்ளார்.
இதற்காக தேனாம்பேட்டையில் ரூ.2 லட்சம் மதிப்பில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதன் நிர்வாகத்தை சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோரிடம் ஒப்படைத்துள்ளார்.
சிறுமிகளை அந்த வீட்டிற்கு அழைத்து வந்து துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதோடு, பல தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கும் சிறுமிகளை அனுப்பியிருப்பது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து காவல்துறை போக்சோ உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, வீரமணி மற்றும் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
வீரமணியால் குறைந்தபட்சம் 9 சிறுமிகள் வரை துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக, கடந்த 2 நாட்களில் 2 முறை சென்னை காவல் ஆணையர் அமல்ராஜை அழைத்து முதலமைச்சர் விஜய் நேரடியாக ஆலோசனை நடாத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனையின் போது, GEM கிரானைட் வீரமணியின் துஸ்பிரயோக வழக்கில் தொடர்புடைய ஒருவரையும் விடக்கூடாது என முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.