துாத்துக்குடி துப்பாக்கி சூடு - உயிரிழந்தவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு

M K Stalin Government of Tamil Nadu
By Thahir Nov 16, 2022 07:58 AM GMT
Report

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நிதியோடு, மேலும் கூடுதலாக தலா 5 லட்சம் ரூபாய் வீதம் நிதி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் 

இதுதொடர்பான அறிக்கையில், தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

அந்த ஆணையம் அரசுக்கு அளித்த அறிக்கையின் மீது கடந்த தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,

துாத்துக்குடி துப்பாக்கி சூடு - உயிரிழந்தவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு | Cm Orders Additional Compensation For Victims

கூடுதல் நிவாரணம் 

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே வழங்கிய நிதியோடு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் வீதம் நிதி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா 5 லட்சம் ரூபாய் வீதம், பொத்தம் 65 லட்சம் ரூபாயினை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.