முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்! - முதல் பயணம் முன்னேற்றமடையுமா?

modi pm meet cm stalin
By Anupriyamkumaresan Jun 17, 2021 02:34 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in அரசியல்
Report

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாள் பயணமாக இன்று சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்பட்டார்.

தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் பயணமாக இன்று டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் நீட் தேர்வு, ஜி.எஸ்.டி, காவிரி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பான கோரிக்கை மனுவையும் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்! - முதல் பயணம் முன்னேற்றமடையுமா? | Cm Of Tn Going To Delhi Meet With Pm Modi

திமுக தலைமையிலான அரசு அனைத்து துறைகளிலும் சரியாக செயல்பட்டு பொதுமக்களிடம் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில், தமிழக முதல்வரின் இந்த பயணம் தமிழகத்தின் கோரிக்கைகளை வெற்றியடைய செய்யுமா என பலரும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

நாளை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் எச்சூரி ஆகியோரை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்! - முதல் பயணம் முன்னேற்றமடையுமா? | Cm Of Tn Going To Delhi Meet With Pm Modi