சண்டையெல்லாம் வெளியே போடுங்க; ஸ்டாலின் திட்டத்திற்கு தடையில்லை - சி.வி. சண்முகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்
எம்.பி. சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கை ரூ.10 லட்சம் அபராதத்துடன் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சி.வி.சண்முகம் எதிர்ப்பு
"உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைத்தார். நவம்பர் மாதம் வரை இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
இதற்கிடையில் தமிழக அரசின் திட்டங்களில் தலைவர்களின் பெயர்கள், படங்கள் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில் "உங்களுடன் ஸ்டாலின்", "நலம் காக்கும் ஸ்டாலின்" போன்ற திட்டங்களில் முதல்வர் பெயர் இடம் பெற்றதை எதிர்த்து அதிமுகவின் சி.வி. சண்முகம் வழக்கு தொடர்ந்தார்.
அதில் இதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் முன்பு அவசர விசாரணையாக வந்தது.
நீதிமன்றம் கண்டனம்
அப்போது உங்களுடன் ஸ்டாலின்' நலம் காக்கும் மருத்துவம் திட்டங்களில் முதல்வரின் பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்த தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன், அதிமுக எம்பி சி.வி. சண்முகத்துக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவி்ட்டுள்ளது.
முன்னதாக அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா சிமெண்ட், அம்மா வாட்டர் பாட்டில் என முதலமைச்சர் ஜெயலலிதா பெயரை குறிக்கும் வகையில் பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளதை திமுக சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பட்டியலிட்டார்.
இதனையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகிள் அரசியல் சண்டையை நீதிமன்றத்திற்குள் வெளியே வைய்யுங்கள், நீதிமன்றத்திற்கு கொண்டுவராதீர்கள் என கண்டனம் தெரிவித்தனர்.