தமிழ்நாடு என்றாலே சாதனை.., முதலமைச்சர் மு. க ஸ்டாலின் பதிவு

M K Stalin
By Yashini Apr 28, 2026 10:09 AM GMT
Report

தமிழ்நாடு தெற்காசியாவில் முன்னணி மாநிலமாக உயர வேண்டும் என்பதே இலக்கு என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2024-2025 நிதியாண்டில் 11.29% இருந்த மாநில பொருளாதார வளர்ச்சி, 2025-2026 ஆம் ஆண்டில் 10.83% என்ற இரட்டை இலக்க வளர்ச்சியைத் தொடர்ந்து பதிவு செய்துள்ளதாக மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

மேலும், தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) ரூ. 31.19 லட்சம் கோடியில் இருந்து ரூ. 35.29 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த வளர்ச்சி குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு என்றாலே சாதனை.., முதலமைச்சர் மு. க ஸ்டாலின் பதிவு | Cm Mk Stalin X Post On Tamil Nadu Economic Growth

வெளியிட்ட பதிவு..,    

தமிழ்நாடு என்றாலே சாதனை! சாதனை! சாதனை!

திராவிட மாடல் தனித்துவமான மாடல்!

சொன்னதை, எண்களிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்!

முதல் மூன்றாண்டுகளில் அடித்தளம் அமைத்து, இப்போது தொடர்ந்து இரண்டாண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளோம். சிறப்பான நமது நிர்வாகத்திற்கு, உழைப்பால் துணை நின்ற தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி! 

இது தொடக்கம்தான். உங்கள் துணையோடு இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி!

நம்முடைய போட்டி என்பது மற்ற இந்திய மாநிலங்களுடன் அல்ல; தெற்காசியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உயர வேண்டும்!