ஏ.ஆர்.ரஹ்மானை திடீரென சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - என்ன காரணம்?
துபாய் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்து பேசியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
துபாயில் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி உலக எக்ஸ்போ கண்காட்சி தொடங்கியது. அந்த கண்காட்சி மார்ச் 31 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த கண்காட்சியில் தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் மார்ச் 25 ஆம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை சுற்றுப்பயணமாக துபாய் சென்றுள்ளார். நேற்று உலக கண்காட்சியில், இந்திய அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கினை அவர் திறந்து வைத்தார். பின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்த முதலமைச்சர் ஸ்டாலின், துபாய் வாழ் தமிழர்களிடையே உரையாற்றினார்.
#DubaiExpo2020 பார்வையிடச் சென்ற என்னை நண்பர் 'இசைப் புயல்' @arrahman அவர்கள் தன்னுடைய ஸ்டூடியோவுக்கு அழைத்து, தான் தயாரித்துள்ள 'மூப்பில்லா தமிழே தாயே' ஆல்பத்தை காண்பித்தார்.
— M.K.Stalin (@mkstalin) March 25, 2022
தமிழுக்கும் இசைக்கும் உலகில் எல்லை இல்லை! pic.twitter.com/ya4uLIlJiB
இதன்பின்னர் துபாயில் உள்ள பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டூடியோவுக்கு தனது குடும்பத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று பார்வையிட்டார். இந்த நிகழ்வின் போது துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கீர்த்திகா உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், துபாய் எக்ஸ்போ 2022 பார்வையிடச் சென்ற என்னை நண்பர் 'இசைப் புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய ஸ்டூடியோவுக்கு அழைத்து, தான் தயாரித்துள்ள 'மூப்பில்லா தமிழே தாயே' ஆல்பத்தை காண்பித்தார். தமிழுக்கும் இசைக்கும் உலகில் எல்லை இல்லை! என பதிவிட்டுள்ளார்.
![மூட்டுவலிக்கு இன்றோடு முடிவுக்கட்டும் முடக்கத்தான் கீரை சட்னி- வாரத்திற்கு எத்தனை சாப்பிடலாம்?](https://cdn.ibcstack.com/article/7566123e-c0e8-4130-ab06-d8b5c00de024/25-67abab9aa731e-sm.webp)
மூட்டுவலிக்கு இன்றோடு முடிவுக்கட்டும் முடக்கத்தான் கீரை சட்னி- வாரத்திற்கு எத்தனை சாப்பிடலாம்? Manithan
![இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க பயமே அறியாதவர்களாக இருப்பார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்?](https://cdn.ibcstack.com/article/342c600b-996a-4b6b-b153-b646bf72b80a/25-67ab9acc7ed3d-sm.webp)