மாநில பேரிடர் மேலாண்மை துறை அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் மேலாண்மை துறை அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
முதலமைச்சர் ஆய்வு
தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நேற்று முன்தினம் முதல் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழையானது தொடர்ந்து பெய்து வருகிறது.
மழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் இருந்து வரும் புகார்களுக்கு துரித நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் சென்னை எழிலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அவசர கால செயல்பாட்டு மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு நடைபெறும் பணிகள் குறித்து அமைச்சர்கள் ராமசந்திரன், சேகர் பாபு, கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று காலை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரிடர் மேலாண்மை அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பொதுமக்கள் மழை பாதிப்பு குறித்து தொலைபேசி வாயிலாக புகார்களை கேட்டறிந்தார்.