தென் மாநிலங்கள் திராவிட மொழி குடும்பத்தைச் சேர்ந்தவை : தென்மண்டல கவுன்சிலில் முதலமைச்சர் முக ஸ்டாலின்
தென் மாநிலங்கள் மொழி கலாசாரம் அடிப்படையில் நெருங்கிய தொடர்புடையவை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர்கள் கூட்டம்
திருவனந்தபுரத்தில் தெற்கு மண்டல கவுன்சில் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதை தொடர்ந்து, மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலின் தென் மண்டல கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் தலைமை வகித்த அமித்ஷாவுக்கு கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பரிசு வழங்கினார்.
தென் மாநிலங்கள் நெருங்கிய தொடர்பு கொண்டவை
தொடர்ச்சியாக, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பூங்கொத்து வழங்கி மரியாதை செலுத்தினார். அப்போது கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் தென் மாநிலங்கள் மொழி,கலச்சாரம் நீண்ட வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில் நெருங்கிய தொடர்பு கொண்டவை.
யாதும் ஊரே யாவரும் கேளிர் எனபதன் அடிப்படையில் தென் மாநிலங்கள் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து வளர்ச்சியை நோக்கி செயல்பட வேண்டும் எனக் கூறினார்.
மின்வாரிய திட்டத்தை கைவிட வேண்டும்
மேலும், மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகை வழங்கும் காலத்தை மத்திய அரசு மேலும் நீட்டிக்க வேண்டும் என தென்மண்டல கவுன்சிலில் முதலமைச்சர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 3, 2022
அதேபோல், ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மின்வாரிய திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், தமிழ்நாட்டுக்கு காற்றாலை மின்சாரத்தை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலையில் பரபரப்பு! அகற்றப்பட்ட புத்தர் சிலை: காலவல்துறையினரின் கன்னத்தில் அறைந்த பிக்கு IBC Tamil