''சமத்துவமும் சமூகநீதியும் மேலோங்கி நிற்கும்" - அம்பேத்கர் நினைவுநாளில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி
சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 65வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்தும். அவரது புகைப்படங்களுக்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், "ஒடுக்கப்பட்டோரின் குரலாய் ஒலித்து, அவர்தம் உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் வாழ்நாளெல்லாம் பாடுபட்ட அறிவுச்சுடர் #BabaSahebAmbedkar நினைவுநாளில், அவர் காட்டிய வழியில் சமத்துவமும் சமூகநீதியும் மேலோங்கி நிற்கும் இந்தியாவைப் பாதுகாக்க உறுதியேற்போம்! " என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஒடுக்கப்பட்டோரின் குரலாய் ஒலித்து, அவர்தம் உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் வாழ்நாளெல்லாம் பாடுபட்ட அறிவுச்சுடர் #BabaSahebAmbedkar நினைவுநாளில், அவர் காட்டிய வழியில் சமத்துவமும் சமூகநீதியும் மேலோங்கி நிற்கும் இந்தியாவைப் பாதுகாக்க உறுதியேற்போம்!#JaiBhim pic.twitter.com/WdNeImyt8i
— M.K.Stalin (@mkstalin) December 6, 2021
நாடாளுமன்ற வளாகத்திலுள்ள அம்பேத்கரின் சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். பிரதமர் மோடி. குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு .மக்களவை தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். அத்துடன் அம்பேத்கரின் நினைவு நாளில்ரசியல் கட்சித் தலைவர்களும் அவரது புகழினை பதிவிட்டு வருகின்றனர்.